தேவைகளும் அழுத்தங்களும் உருவாகும் போது புதிய பாதைகளுக்கான கதவுகளும் திறக்கப்படும் என்பதே விதியாகும். விஞ்ஞானக்கண்டு பிடிப்புகளுக்கும் இது பொருந்தும். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்க்கப்படுவதை ''பரமக்குடி'' முத்துப்பாண்டியும், ''பதுளை நகர்'' ரட்னாயக்கவும் உடனடியாகப் பார்க்க உதவியது இந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களே. ஆனால் இந்த விஞ்ஞானம் போர் என்ற அபாயகரமான விடயத்துக்குள்ளும் புகுந்து விட்டது தான் சோகமான விடயம். தவிர்க்க முடியாததும் கூட. ஆம்.. அமெரிக்கா 2019ம் அண்டு அளவில் தனது படை வீரர்களின் தொகையை வெகுவாகக் குறைத்து ரோபோ வீரர்களை போருக்கு அமர்த்துவது பற்றி அறிவித்துள்ளது.
இன்றைய உலக வரைபடமே அமெரிக்கா போன்ற ஆதிக்க சக்திகளின் பேனாவால் வரையப்பட்டுள்ளது என்று கூறலாம். இவர்களின் நோக்கமே உலக நாடுகளை வளைத்து அவற்றின் செல்வங்களை முடியும் வரை அள்ளுவது தான். என்னதான் பெரும் பணக்கார நாடாக இருந்தாலும் இராணுவ பலம் இல்லாவிட்டால் எல்லாமே பூஜ்யம் தான் என்பதும் இராணுவ பலத்தின் மூலம் கிடைக்கும் அங்கீகாரமே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் என்பதும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நன்கு தெரியும். ஆனால் இவ் விடயத்தில் இவர்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது உயிர் இழப்புக்கள் தான். சாதாரண குடி மக்களின் உயிர் பற்றி இவர்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்..? நான் கூறுவது இராணுவ வீரர்களின் உயிர் இழப்புக்களே. முக்கியமாக ஆப்கானிஸ்தான், வியட்நாம்,ஈராக் ஆகிய போர்களில் அமெரிக்க இழந்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.
இப்படிப்பட்ட நிலையில் சில காலம் முன்பு கண்டுபிடிக்கப் பட்ட ''ஆளில்லாத - அதாவது விமானிகள் இல்லாத விமானங்கள்'' இவர்களின் தலைவலியைக் கொஞ்சம் குறைத்தன என்று கூறலாம். நாடுகளின் வான் பரப்பு எல்லை, இறைமை எதைப் பற்றியும் கவலைப்படாமல் நுழைந்து தாக்கும் சக்தி கொண்டவை தான் இவை.விமானிகள் கைது, விமானிகள் மரணம், விமானிகளைக் காணவில்லை போன்ற சங்கடங்கள் எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்த இவர்கள் மேலும் ரூம் போட்டு யோசித்ததில் நிச்சயம் TERMINATOR (1984) ஆங்கிலப் படம் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். நான் மதுரை நகரில் டிக்கட் கிடைக்காமல் வீடு திரும்பிய ஒரே ஆங்கிலப் படம் இது தான். குண்டு வைத்தாலும், துப்பாக்கியால் துளைத்தாலும், நெருப்பு வைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து வந்து இயந்திர மனிதனாக மாறி எதிரிகளை அழிப்பார் நடிகர் அர்னொல்ட் சேவஸ்நேகர். இப்பாத்திரத்தை உருவாக்கியவர் டைட்டானிக், அவதார் போன்ற திரைப்படங்களின் தந்தை ஜேம்ஸ் கமரூன் தான். இதே போன்ற ரோபோ போர் வீரர்களை உருவாக்கவே அமெரிக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டுள்ளது.
மனிதனின் விரல் துப்பாக்கியின் மீது இருந்த காலம் மாறி வருகிறது. இன்று அதே விரல் இராணுவக் கட்டுப்பட்டு அறையில் உள்ள ரிமோட் கண்ட்ரோல் மீது இருக்கப் போகிறது. ஈராக் போரில் தொடர்ந்து ஈடுபடும் ஒரு படைவீரன் அமெரிக்க எல்லையைத் தாண்டியதே இல்லை என்றால் நம்ப முடிகிறதா.?இது எப்படி நடக்கிறது.? அங்குள்ள படை முகாமில் இருந்து கொண்டே ஆளில்லாத விமானங்களை இயக்கிய அவன் ஏராளமான
எதிரிகளை அழித்து, தீவிரவாதிகளின் முகாம்களையும் படமெடுத்து முடித்து ஒரு சில நிமிடங்களில் தனது மகளை சிறுவர் பூங்காவுக்கு அழைத்துச் செல்ல முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த ரோபோ தொழில்நுட்பமே. இன்று வீதி ரோந்து, நேருக்கு நேர் யுத்தம், மறைந்திருந்து தாக்குதல் போன்ற அனைத்துக்கும் ரோபோக்கள் வரபோவதாக அமெரிக்கா கூறுகிறது என்றால் இவர்கள் நீண்ட காலமாக இதற்கான சோதனைகளில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருப்பார்கள் என்பது உறுதி. இன்றைய உலக அதிசயமான இன்டர்நெட்டை இராணுவ தேவைகளுக்காக 1960ம் ஆண்டுகளிலேயே இரகசியமாகப் பயன்படுத்தியவர்கள் தான் இந்த அமெரிக்கர்கள். இதே போன்று தான் இந்த ரோபோ வீரர்கள் பற்றிய அறிவிப்புகளும் இருக்கின்றன. அமெரிக்கர்கள் மட்டும் தான் இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கூற முடியாது. இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஜப்பான், சீனா, ஈராக் போன்ற நாடுகளும் ரோபோ வீரர்களை உருவாக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ''உலக போலீஸ்காரன்'' அமெரிக்காதான் இவ்விடயத்தில் முன்னணியில் இருக்கிறது., ரோபோவீரர்களை இராணுவ தேவைகளுக்குப் பயன் படுத்துவதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. போர்வீரர்களின் மரணம், அவர்களின் குடும்பங்களுக்குரிய நஷ்ட ஈடுகள், இவற்றை எல்லாம் வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் குழப்பங்கள், வழக்குகள், அங்கம் இழந்த வீரர்களைப் பராமரித்தல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. ரோபோ வீரர்களுக்கு ஓய்வு, உறக்கம், உடை, உணவு, மதுவகைகள், உறைவிடம், மருத்துவ வசதி, சம்பளம் போன்ற எதுவும் வழங்கத் தேவை இல்லை. அவற்றை எல்லாம் அவை கேட்கவும் செய்யாது. மேலும் அவை தனது சக ரோபோ வீரன் எதிரியின் கணைகளால் அழிந்து போனால் ஒரு நாளும் கோபம் கொள்ளது. எனவே பழிக்குப் பழி வாங்கவும் செய்யாது. பயம், களைப்பு, உயிரைக் காப்பாற்ற ஒடி ஒளிவது, கோழைத்தனம் போன்றவையும் நிச்ச்சயம் ரோபோ வீரர்களின் குணங்களாக இருக்க முடியாது .
அதே நேரத்தில் பாதகமான அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. ரோபோக்களின் கண்களுக்கு கையில் பூக்களோடும், முகத்தில் புன்னகையுடனும் தன் தந்தையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல ஓடோடிச் செல்லும் 8 வயது சிறுமிக்கும், போர் டாங்கி T20 க்கும் வேறுபாடு தெரியாமல் போய் விடலாம். எனவே இவற்றுக்கு தெளிவான, சரியான ஆணைகளை வழங்காவிடில் மாபெரும் மனித அழிவுகள் ஏற்படுவது உறுதி. எதிர்காலத்தில் ரோபோ வீரர்கள் தனது முடிவுகளைத் தானே எடுக்கும் அபாயமும் உள்ளது. ரோபோ வீரர்களுடன் சம்பந்தப்பட்ட கணினிகளுக்கு எதிரிகள் வைரஸ்கள அனுப்பி இவற்றை செயல் இழக்கச் செய்யலாம் என்பதும் ஒரு பெரிய RISK தான். இவை தவிர தீவிரவாதிகளும் ரோபோ வீரர்களை உருவாக்கத் தொடங்கி விட்டால் என்ன நடக்கும் என்று நான் சொல்லத் தேவை இல்லை. இராணுவ வேலை வாய்ப்புகளும் வெகுவாகக் குறையலாம். ஆயிரம் நன்மை-தீமைகள் இருந்தாலும் உலக நாடுகள் இவற்றின் உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. வாகன உற்பத்தியில் சுமார் 70 சதவிகித வேலைகளை மனிதர்களிடம் இருந்து ரோபோக்கள் பிடுங்கி எடுத்து விட்டன. இந்நிலை இனி யுத்த களங்களிலும் ஏற்படத்தான் போகிறது. சொல்ல முடியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் ''பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளிக்க வேண்டும்'' என்று ரோபோக்கள் தேர்தல் மேடைகளில் பேசுவதைக் கேட்க வேண்டி வந்தாலும் வரலாம்...!

No comments:
Post a Comment