எனது மாமா திரு முத்துவடுகு ராமசாமி அவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சொல் தான் ''சிவகுருமுருகுவசி'' ஆகும். வலமிருந்து இடமாக மாற்றி வாசித்தாலும் அதே உச்சரிப்பு வருவது தான் இச்சொல்லின் சிறப்பு அம்சமாகும். அன்று முதல் இப்படிப்பட்ட சொற்களின் மீது எனக்கு பெரிதும் ஆர்வம் பிறந்தது. பாடசாலைக் காலத்திலேயே நாம் அறிந்த விகடகவி, தாத்தா, மாமா, பாப்பா, திகதி, காக்கா, போன்ற சொற்களும் இப்படிப்பட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டவையே. ஆங்கிலத்தில் இவற்றைப் PALINDROME என்பர்.ஆங்கிலத்தில் இத்தகைய சொற்கள் ஏராளம் உண்டு.அவற்றில் 10 சொற்களை மாத்திரம் இப்போது காண்போம்.
1) RADAR
2) LEVEL
3) ROTATOR
4) DAD
5) NOON
6) CIVIC
7) REFER
8) TENET
9) MADAM
10)MALAYALAM (LANGUAGE)
எமது தமிழ் மொழியிலும் இத்தகைய PALINDROMES சொற்கள் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் இருப்பதை விட தமிழில் இருப்பவை மிகவும் குறைவே. தமிழில் நான் சேகரித்த 41 சொற்களையும், 2 இடப் பெயர்களையும் இப்போது காண்போம்.
1கலக
2கருக
3கடக
4கலைக
5கற்க
6காமுகா
7குடகு (மலை)
8தந்த
9தராத
10தகாத
11தாவுதா
12தாத்தா
13காக்கா
14துவளுவது
15தேடாதே
16தேறாதே
17தேயுதே
18தேடுதே
19மகரகம (ஊர்)
20மாமா
21மாறுமா
22மானமா
23மாயமா
24மாடமா
25மாதமா
26மேயுமே
27மேளமே
28மேகமே
29மோகமோ
30மோசமோ
31மோதுமோ
32வாழவா
33வாடவா
34விகடகவி
35வினவி
36விடுவி
37வேகமாகவே
38பாபா
39பாப்பா
40யானையா
41யோகியோ
42ஸ்ரீலஸ்ரீ
43திகதி
ஆங்கில மொழியில் PALINDROME முறையில் அமைக்கப்பட்ட நீளமான வாக்கியங்கள் ஏராளம் உள்ளன. இவை மிகவும் சுவாரஸ்யமும், நுணுக்கமும் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. இவற்றில் 10 வாக்கியங்களை மாத்திரம் இப்போது காண்போம்.
1) BORROW OR ROB
2) GODS DOG
3) STEP ON NO PETS
4) PULL UP IF I PULL UP
5) TOO HOT TO HOOT
6) LAMINATED E.T.ANIMAL
7) DRAW PUPILS LIP UPWARD
8) NO IT IS OPEN ON ONE POSITION
9) ARE WE NOT DRAWN ONWARD NEW ERA
10)TIDE NET SAFE SOON A NOOSE FASTENED IT
ஆங்கில மொழியில் பெரும் புலமை பெற்றவர்களுக்கு இத்தகைய வாக்கியங்கள் அமைப்பது மிகவும் எளிது. காரணம்
1) ஆங்கில மொழியில் உள்ள மிகவும் குறைவான (26) எழுத்துக்கள்
2) ஒரே ஆங்கில எழுத்துக்குக் காணப்படும் பல வகையான உச்சரிப்புகள்
3) ஒரு சொல்லின் தொடக்கத்தில், நடுவில், கடைசியில் என்று எந்தப் பகுதிக்குள்ளும் புகுந்து கொள்ளும் அனைத்து ஆங்கில எழுத்துக்களின் தன்மை
4) சொல்லுக்குள் இருந்தாலும் உச்சரிக்கப் படாத தன்மை (SILENT LETTERS)
5) ஆங்கில மொழியில் PALINDROME வாக்கியங்களைக் கண்டு பிடிக்கும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அதிகமாக இருப்பது
ஆனால் தமிழ் மொழியில் இத்தகைய தன்மைகள் இல்லாத காரணத்தால் நீளமான PALINDROME வாக்கியங்களைத் தமிழில் அமைப்பது மிகவும் கடினமாகும். எனினும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தமிழ் மொழியிலும் இத்தகைய வாக்கியங்களை அமைக்க முடியும் என்று கூறியுள்ளார். இவர் தமிழ்-ஆங்கில PALINDROME வார்த்தைகளில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். பல ஆண்டுகளுக்கு முன் தமிழில் இத்தகைய வாக்கியங்களை அமைக்கச் சொல்லி தனது வாசகர்களுக்குப் போட்டியொன்றை வைத்தார். ஆனால் எவரும் வெற்றி பெறவில்லை.
கி.பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் அன்றே தமிழ் மொழியில் PALINDROME முறையில் ''மாலை மாற்று'' என்னும் திருப்பதிகம் மூலம் இறைவனை வணங்கிப் பாடியுள்ளார். வியக்க வைக்கும் அப்பாடலை இப்போது காண்போம்.
1)யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
2)யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
3)தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
4)நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
5)யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
6)மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
7)நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயே நீ மாயாநீ
8)நேணவராவிழ யாசைழியே வேகாதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே
9)காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
10)வேரியுமே காழியயே யேனைனிணே மடளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழி காவண மேயுரிவே
11)நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிச யாதமிழாகரனே
திருஞானசம்பந்தரின் அற்புதமான தமிழ்ப் புலமையை இப்பாடலில் நாம்
காணலாம். அவர் செய்துள்ள சொல் விளையாட்டை ரசிக்க வேண்டுமெனில் இப்பதினொரு பாடல்களையும் தனித்தனியாக கவனித்துப் படிக்க வேண்டும்.பாடலின் முதல் அடி, இரண்டாம் அடியில் அப்படியே வலமிருந்து இடமாக தலைகீழாகத் திரும்புவதைக் காணலாம். இவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் உண்டு. தமிழ் மொழியில் PALINDROME முறையை முதலில் பயன்படுத்திய பெருமை திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனாரையே சாரும்.
சில கட்டுரைகளின் உதவியுடன் சில தமிழ் PALINDROME வாக்கியங்களை நான் சேகரித்துள்ளேன். அவற்றை இப்போது காண்போம்
1) யானை பூனையா?
2) வா தாத்தா வா
3) மாடு ஓடுமா?
4) திருமால் மாருதி
5) மேள தாளமே
6) மோரு தருமோ?
7) யானையா பூ யானையா?
8) மாவடு போடுவமா?
9) தேளு மீளுதே
10)மோரு வருதே
எழுத்தாளர் சுஜாதா மூலம் நான் அறிந்து கொண்ட சில வாக்கியங்களை இப்போது காண்போம்.
1) மாலா போலாமா?
2) தேரு வருதே
3) மோரு போருமோ? ( போருமோ என்றால் பேச்சு வழக்கில் போதுமோ)
நானும் தமிழில் PALINDROME வாக்கியங்களை அமைக்க முடிவு செய்தேன். இது மிகவும் சவாலுக்குரிய விடயமாகவே இருந்தது. எனினும் நீண்ட நாள் முயற்சிக்குப் பிறகு 42 வாக்கியங்களை சொந்தமாக என்னால் உருவாக்க முடிந்தது. அவற்றை இப்போது காண்போம்
1) வா யார் சூர்யாவா?
2) விரலா ரவி?
3) மேனகா கற்க கானமே
4) வைதேகி தேவை
5) பாரு கிருபா
6) புதனா தபு?
7) கோவை தேடுதே வைகோ
8) வாசி தயாரி தெரியாத சிவா
9) வாசி சிவா
10)பாசமா சபா?
11)மாதவி பூ விதமா?
12)மாதவா கை வாதமா?
13)சுமா நீ மாசு
14)திருஸ்டி ஸ்ருதி
15)சுசி தா சிசு
16)சாரு பெருசா
17)மாது போதுமா?
18)வாடுதே தேடு வா
19)போதுமோ மோது போ
20)மாறுதே தேறுமா?
21)மாணவா பூ வாணமா?
22)துருவி தா விருது
23)மாவதமா தவமா?
24)வேதமோ நீ மோதவே
25)வாடி வா
26)போடா போ
27)தோடு ஓடுதோ?
28)தருகவே கருத
29)தாவணி பணிவதா?
30)சாராத தராசா?
31)சேராத தராசே
32)குருதியை திருகு
33)தோகை கைதோ?
34)சைவ வசை
35)வைர ரவை
36)மா பலா லாபமா?
37)மாய சிகரமா ரகசியமா?
38)வைகை கை வை
39)திமுகவா கமுதி? (கமுதி-இந்திய ஊர்)
40)சுப பசு
41)குலவி நீ விலகு (குலவி - ஒன்றாக இருந்து)
42)வாதமோ நீ மோத வா
43)கை வை, வைகை
44)தாமாக மாதா
45)கைதி பொதிகை
வா தாத்தா வா, மாடு ஓடுமா ஆகிய சொற்களை அடிப்படையாக வைத்து நான்
உருவாக்கியவை
1) வா மாமா வா
2) வா பாப்பா வா
3) மாடு தேடுமா?
4) மாடு வாடுமா?
5) மாடு பாடுமா?
இவ்வாக்கியங்களில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. சுத்தமான தமிழ் இலக்கணம் இவற்றிலுள்ள பெரும்பாலான வாக்கியங்களுக்குப் பொருந்தாது. இலக்கணத்தில் இருந்து சற்றே விலகினால் மாத்திரமே இவற்றை அமைக்க முடியும். அடுத்ததாக இவற்றின் அர்த்தங்களை சற்றே சுற்றி வளைத்துத் தான் விளங்கிக்கொள்ள முடியும். உதாரணமாக ''வேதமோ நீ மோதவே'' என்ற வாக்கியம் ''வேதம் கற்ற நீ அது பற்றி என்னுடன் மோத வா'' என்று அழைப்பதைக் குறிக்கும்.''கைதி பொதிகை'' ''சாரு பெருசா'' போன்ற அர்த்தம் இல்லாத வாக்கியங்களையும் அமைக்கலாம். மேனகா, சூர்யா, கிருபா, ரவி, சாரு, மாதவி, போன்ற பல பெயர்களும் தமிழ் மொழியில் PALINDROMES அமைக்க பெரிதும் உதவி செய்வதை நாம் காணலாம். மேலும் கேள்வி கேட்கும் சொற்களாக இவற்றை அமைப்பதும் எளிது. PALINDROMES பற்றிய எனது ஆய்வுகள் இக்கட்டுரையுடன் நிறைவு பெற்று விட வில்லை. தொடர்ந்து இடம் பெறும். வாசகர்களும் தமிழில் PALINDROMES சொற்களையும், வாக்கியங்களும் அனுப்பி எனக்கு உதவலாம். நன்றி...வணக்கம்...!