இணையத்தில் உள்ள என்னைக் கவர்ந்த சில வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கும் வலைப்பூ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.எனினும் இது பற்றிய எந்த விபரங்களும் எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் கூகிள் தளத்துக்குச் சென்று ''வலைப்பூ தொடங்குவது எப்படி?'' என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன்.வந்து விழுந்த விபரங்களோ என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. ''சீ..சீ...இந்தப்பழம் புளிக்கும்...!'' என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு வலைப்பூ தொடங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எனினும் என்றாவது ஒருநாள் வலைப்பூ தொடங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. பிறகு எனது உயிரினும் மேலான மனைவி மேனகா கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பேஸ்புக் சமூக வலையமைப்பில் எனது எண்ணங்களைச் சுருக்கமாகப் பதிவு செய்து கொண்டு வந்தேன். எனினும் பேஸ்புக் ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருவதால் எனது பதிவுகள் கீழே ஒடி மறைந்து கொண்டிருந்தன. இந்நிலையில் எனது உறவினரான சுதர்சினி ரமேஷ் என்னுடன் தொடர்பு கொண்டு ''உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. நீங்கள் வலைப்பூ ஒன்றைத் தொடங்கலாமே'' என்றார். ஏற்கனவே இவ்விடயத்தில் வெறுத்துப் போயிருந்த நான் ''இதற்கு எவ்வளவு செலவாகும்?'' என்று கேட்டவுடன் அவர் சிரித்து விட்டார் .வலைப்பூவை உருவாக்க வீட்டிற்கு வரும் கணிணி நிபுணரின் கட்டணம்.... வலைப்பூவிற்கு செலுத்த வேண்டிய மாத சந்தா கட்டணம்... என்றெல்லாம் கற்பனை செய்ததன் விளைவே அந்தக் கேள்வி..! ''ஒரு சதம் கூட செலவாகாது. நானே வலைப்பூ ஒன்றை உருவாக்கித்தருகிறேன். முதலில் நல்ல தமிழ்ப் பெயர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்'' என்றார். நான் பரிசீலனை செய்த பல பெயர்களில் வலைப்பூக்கள் எற்கனவே இருந்தன. எனவே புதிய பெயரைத் தேட வேண்டி இருந்தது. மூன்று மாத முயற்சிக்குப் பிறகு எனக்குக் கிடைத்த பெயர் தான்''தேரோட்டம்...!'' பெயரைக் கூறிய அடுத்த சில நாட்களிலேயே வலைப் பூவை உருவாக்கிக் கொடுத்து விட்டார் சுதர்சினி. தொடங்கிவிட்டது ''தயாளனின் தேரோட்டம்!''. இந்த வேளையில் எனது முதல் ரசிகரும், நான் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு உற்சாகத்தை அளிக்கும் எனது மனைவி மேனகா...மற்றும் வலைப்பூவை உருவாக்கித் தந்து உதவிய சுதர்சினி ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரிடம் உள்ள திறமையை இனம் கண்டு உற்சாகப்படுத்துவது மிகவும் அவசியமானது. இவ்விடயத்தில் அனைவரும் சுதர்சினியைப் பின்பற்ற வேண்டும்...! தொடர்ந்து எனது எழுத்துக்களைப் படித்து ஆதரவு தரும் படி எனது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.. வணக்கம்...!
Nice :)
ReplyDeleteவருக வருக என்று வலைப்பூ உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்....
ReplyDeleteதேர் சிறப்பாக ஓட என்றும் என் வாழ்த்துகள்...
Nice one Dhayalan Athan Super start sorry Tamil la type panathathuku :).... Innum neraya articlesa expect panren :)
ReplyDeletewow, nalla irukku http://ptcrefs.blogspot.in/
ReplyDelete